தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ…

பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த போலி வைத்தியர் கைது !

மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இரண்டு வாரங்களாக வைத்தியர்…

இன்றைய தங்க விலை நிலவரம் !

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று (20) 212,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர்…

கிழக்கு வங்காள விரிகுடாவில் அதி தீவிர வானிலை மாற்றம் ! வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை !!

கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது எதிர்வரும் 25…

கொழும்பில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பதுளை அராவத்த பிரதேசத்தைச்…

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன – விமல்வீரவன்ச

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என அவர் தெரிவித்துள்ளார்.…

வடக்கு மாகாண திணைக்களம் ஒன்றில் ஊழல் முறைகேடு: விசாரணைகள் ஆரம்பம்

வடக்கு மாகாண திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் வர்ணன் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு  விசாரணைகளை ஆரமபித்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக கொழும்பில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை…

புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிப்பு! அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரமை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.  கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக…

தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு 

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு…

விமான தபால் சேவையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்!

துபாயிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 03 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன.  இந்த பொதிகள் கடந்த ஜூலை…