January 15, 2026

battifirst.com

Voice of Singingfish

உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலையை குறைத்தது போன்று உணவுப் பொருள் விலைகளும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்டது போன்று எதிர்காலத்தில் உணவுப்பொருட்கள் மீதான வரிகளும் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு வாகனங்கள் இன்றி செயற்பட முடியாது எனவும் இதனால் சாதாரண வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.