மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
More Stories
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !
இன்றைய வானிலை