புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுகள் இன்று (21) நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வின் போது சபாநாயகர் தெரிவு முதலில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவின் பின்னர், பிரதி அமைச்சர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சுமார் 27 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More Stories
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !
இன்றைய வானிலை