August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவினரால் இடைவிலகல் மாணவர்களை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன்  வழிகாட்டலின் கீழ் றீற்றா கலைச்செல்வன் முறைசாராக கல்வி இணைப்பாளரின் ஒழுங்கமைப்பில்  மட்/பட்/காக்காச்சிவட்டை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான கட்டாயக் கல்வி தொடர்பான விழப்புணர்வுச் செயற்பாடு நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவினரால் இடைவிலகல் மாணவர்களை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் கட்டாயக் கல்வியின் முக்கியத்தவம், சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, துஸ்பிரயோகம், போசணை, சுகாதாரம், ஒழுக்கவிழுமியங்கள், இளவயதுத் திருமணத்தின் தாக்கம், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்ததல், குடும்ப வன்முறைகள், மாணவரகளின் கல்வி, பெற்றோருக்கான சுயதொழில் வழிகாட்டல், மாணவர்களை சுய கற்றலுக்கு ஊக்கப்படுத்தல், வீட்டுச் சூழல், பாடசாலை வரவில் கவனமெடுத்தல், தந்தை தாய் வெளிநாடு செல்லல், குடும்ப உறுப்பினர்களின் மதுப் பாவனை போன்ற விடயங்கள் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களும் பெற்றோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்காக பட்டிருப்பு வலயத்தின் 54 பாடசாலையில் கடமையாற்றும் 54 அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான ஆரம்ப கட்டப் பயிற்சி பட்டிருப்பு வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.