August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

முன்னாள் அமைச்சர் அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சற்று நேரத்திற்கு முன்னர் பதுளை பொலிஸார் கைது செய்தனர்.

அமைதி தேர்தல் காலத்தில் பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் பதுளை பொலிஸார் அவர்களை அங்கிருந்து கலைத்துள்ளனர். 

ஹரீன் பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன்போது முன்னாள் அமைச்சர், தான் அணிந்திருந்த ஆடையை கழட்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.