August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முயற்சித்த பெண்கள் உட்பட 18 பேர் கைது

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முயற்சித்த 13 பெண்களும் 05 ஆண்களும் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச்சாவடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி இலக்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் கொண்ட ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முயற்சித்த பெண்கள் உட்பட 18 பேர் கைது

வெளிநாடு செல்வதற்குத் தேவையான கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு போலியான ஆவணங்களுடன் திணைக்கள வளாகத்தில் தங்கியிருந்த 18 பேர் ஏதேச்சையாக சோதனையிடப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடவுச்சீட்டு பெறுவதற்காக திணைக்களத்திற்கு வரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் ஆவணங்களில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த குழுவினர் அந்த இலக்கங்களை நுட்பமாக மாற்றியமைத்து போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவத்தின் மேல் எழுதப்பட்ட மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் உத்தியோகபூர்வ முத்திரையும் போலியாக உருவாக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது சந்தேகநபர்களுக்கு யாரால் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கொடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விசேட மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.