August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டமானது  இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று (18) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திஸாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

இந்தநிலையில் , புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு பத்து பேரைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.