ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரமை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார்.
நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.
விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அனுர கருணாதிலக்க பதவியேற்றுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னலகே பதவியேற்றுள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துநெத்தி பதவியேற்றுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார்.
பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்தியாரத்ன பதவியேற்றுள்ளா்.
More Stories
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !
இன்றைய வானிலை