January 15, 2026

battifirst.com

Voice of Singingfish

விமான தபால் சேவையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்!

துபாயிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 03 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த பொதிகள் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி அன்று கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

விமான தபால் சேவையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்!

இந்நிலையில், இந்த பொதிகளை கொண்டு செல்ல உரிமையாளர்கள் எவரும் வராததால் சுங்க அதிகாரிகள் இந்த பொதிகளை நேற்றைய தினம் இரவு சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது இந்த பொதிகளிலிருந்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.