October 17, 2025

battifirst.com

Voice of Singingfish

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (7) மாலை 5 மணிக்கு  இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சோந்த ஆச்சாரியும் விவசாயிமான 40 வயதுடைய ஏ.றமீஸகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி பலி!

குறித்த நபர் சம்பவதினமான  வியாழக்கிழமை (7) மாலைய உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையின் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.