August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

3,000 சாரதி அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன!

இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3,000 சாரதி அனுமதி பத்திரங்களை நீதிமன்றங்கள் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறல்களை மேற்கொண்டமை தொடர்பான விசாரணைகளை அடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய இவ் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

3,000 சாரதி அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன!

இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்துதல் மற்றும் தரமற்ற வாகனங்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர் மொஹமட் மஹீஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பேராசிரியர் மொஹமட் மஹீஸ் தெரிவித்துள்ளார்.