August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

உத்தரவாதங்கள் பலிக்காததற்கு அநுர அரசின் சிரமங்கள்..!

எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் என்னென்ன மாற்றங்களை செய்து முடித்திருக்க வேண்டுமே அவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தால் நினைத்த மாற்றங்களை முன்னெடுக்க முடியாது போய்விடும். இதுவே நடைமுறையுமாகும்.

உத்தரவாதங்கள் பலிக்காததற்கு அநுர அரசின் சிரமங்கள்..!

இதிலும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரு வாரங்கள் வரையிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது எதிர்க்கட்சியினரோ பெரிதாக எதையும் பேச முன்வரவில்லை.

குறிப்பிட்ட சில வாரங்கள் முடிவடைந்த பின்னர்தான், எதுவுமே பெரிதாக நடக்கவில்லை என தெரிந்து கொண்ட பின்னரே அரசியல்வாதிகள் பலர் தமது அஸ்திரங்களை வீசத் தொடங்கினர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும்