August 25, 2025

battifirst.com

Voice of Singingfish

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையம் மற்றும்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஏற்பாட்டில் 18.05.2025 இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில், கவுன்சிலர் சசி மயில்வாகனம் பிரித்தானியக் கொடியினை ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியை முன்னாள் போராளி முகுந்தன் ஏற்றிவைக்க,கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச்செல்வம் உதயராஜாவின் மகன் பவசுதனும் ஆகியோர் பொதுச்சுடரினை ஏற்றினர்.

அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றி நினைவுகூர்ந்தனர்.

இதனைத் தொடந்து,  தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா  அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையை பாலா மாஸ்டர் கந்தையா பாலகிருஷ்ணன் வழங்கினார்.

இதனையடுத்து, அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.