January 15, 2026

battifirst.com

Voice of Singingfish

டிக்டொக் எம்.பி அர்ச்சுனாவால் யாழில் நடந்த அசம்பாவிதம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முன்மொழிவைச் செய்த போது அநாகரிகமாக செயற்பட்ட டிக்டொக் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, பளை – முகாமலைப் பகுதியில் பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்படுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என பனை அபிவிருத்தி சபைத் தலைவர் வி.சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி தனது சுயநலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் மாத்திரமே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.

மேலும் குறித்த முகமாலைப் பகுதியிலே நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை தொடர்ந்து அனுமதிப்பதா என்ற கேள்விக்கும் டிக்டொக் எம்.பியிடம் பதில் உள்ளதா எனவும் அவர் தொடர்ந்து கேள்வியெழுப்பியுள்ளார்.