August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

பாடசாலையை தவிர்க்கும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் அவதானம் !

உயர்தரக் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழப்பதை நிறுத்த வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளின் உயர்தர வகுப்பறைகளில் மாணவர்கள் இருப்பது மிகவும் குறைந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ஆண் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி வெகு தொலைவில் இருப்பதாக பிரதமர் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு சமூக அல்லது பொருளாதார காரணங்களின் அடிப்படையிலும் பிள்ளைகள் கல்வியைத் தவறவிடக் கூடாது என்றும், 13 வருடங்கள் பாடசாலை கல்வியுடன் உயர்கல்விக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.