August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று புதன்கிழமை (01)  தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் ருவான்  எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.