May 31, 2026

battifirst.com

Voice of Singingfish

போலி கடவுச்சீட்டுடன் இரு இலங்கையர்கள் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

சந்தேக நபர் நேபாளத்திற்குச் செல்லும் இந்திய விமான சேவையில் பயணிப்பதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார், ஆனால் குடிவரவு கருமபீடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குடிவரவு கருமபீட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பரிசோதித்ததில், அவருடைய கடவுச்சீட்டு போலியானது என்றும், இதேபோன்ற அம்சங்களைக் கொண்ட மற்றொரு நபரின் தகவலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கண்டறிந்தனர்.

மேலும், விசாரணையில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.