August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை !

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 20ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், அன்றைய தினம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை !ந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவிக்கின்றார். நேற்றிரவு புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமித பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் சந்திரலால் குணசேகர கூறுகையில், தற்போது கடைகளுக்கு அரிசி விநியோகிப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவிக்கின்றார். நேற்றிரவு புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமித பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் சந்திரலால் குணசேகர கூறுகையில், தற்போது கடைகளுக்கு அரிசி விநியோகிப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததால், அரிசியை அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தின் தலையீட்டினால், அரிசி இறக்குமதி செய்தாலும், அதனை இலங்கை சந்தைக்கு விடுவிக்க முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி தொகை அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முறையான அரிசி விநியோகம் இன்மையால் மூடப்பட்ட மரதகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசிக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் துறையினரின் தலையீட்டில் அரிசி தொகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.