August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

சட்டப்பட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நாமல் ; விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு !

தமது சட்டப்பட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்க்ஷ : தமது சட்டப் பட்டம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ‘அடிப்படையற்றவை’ அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

கடந்த சில ஆண்டுகளாக என் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளைப் போலவே தற்போது, முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. மட்டுமன்றி இலங்கை சட்டக்கல்லூரியின் நம்பகத்தன்மையையும் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பான விசாரணையின் பெறுபேறுகள் தமக்கெதிரான இந்த குற்றச்சாட்டுக்கள தவறானது என்பதை தெளிவுபடுத்தும் என்றும் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். எனது சட்டப் பரீட்சைகளின் போது எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. விசாரணை இதை நிரூபிக்கும்.இதனால், விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். உண்மை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.