August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ,    எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.