August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(21.01.2025) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,”வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 5 ஹெக்டயருக்கும் குறைவான தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் உரத்தில் 27,500 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் பயிர்செய்கைக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

தற்போது நிலவும் தேங்காய் நெருக்கடியால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை தற்போது 250 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.