மட்டக்களப்பில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும் மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, புடோல், மிளகாய், உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிரினங்களையும், இவ்வாறு குரங்குகள் அழித்து வருவதாக அப்பகுதி விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே குரங்குகளின் தொல்லையிலிருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Related Posts

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம்…

    கிராம அலுவலர் மீது தாக்குதல் சம்பவம் ; மட்டக்களப்பில் போராட்டம் !

    கடமையில் இருந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து, மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் நேற்று(30) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்பட்ட நாசிவன் தீவு கிராமப்…