கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபரமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 23 கிலோ 165 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
More Stories
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !
இன்றைய வானிலை