August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை !

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.