மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது !

கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம மற்றும் மீகொடை பொலிஸ் பிரிவுகளில் வைத்து சந்தேகநபர்கள் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்கை மற்றும் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸ் நிலையம் மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கடந்த 19ஆம் திகதி மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இக்குற்றத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரையும் அதற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்தது.

குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபருடன் இந்தக் குற்றத்தைச் செய்ய வந்தவர் என்பதுடன், மற்றைய இருவரும் இந்த குற்றத்திற்கு உதவியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • Related Posts

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21.01.2025) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

    அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !

    வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து…