கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புத்தளம் – போலவத்த பிரதேசத்தில்  நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

விபத்திற்கு காரணமான வாகன சாரதி கைது செய்யப்பட்டு மாரவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹலவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  • Related Posts

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21.01.2025) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

    அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !

    வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து…