August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (02) மாலை 04.00 மணி முதல் இன்று மாலை 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாத்தளை மாவட்டத்தின், அம்பங்கக கோரளை, ரத்தோட்ட, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம ஆகிய பிரதேச செயலகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

இதேவேளை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத, டெல்தொட்ட, கங்கவட கோரளை, பாதஹேவாஹெட, ஹாரிஸ்பத்து, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, தொலுவ, உடுநுவர, தும்பனே, பூஜாபிட்டிய, பன்வில, பஸ்பாகே கோரளை, அக்குரனை, அதலியகந்த, கங்க இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகங்களும் பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎலல, ⁠மீகஹகிவுல, பண்டாரவளை ஆகிய பிரதேச செயலகங்களும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் கேகாலை, ருவான்வெல்ல, புலத்கொஹுபிடிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நுவரெலியா மாவட்டத்தின் ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.