August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

புதிய பிரதம நீதியரசர் இன்று பதவி பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

பிரதம நீதியரசராக பதவி வகித்த ஜயந்த ஜெயசூரிய ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அந்தப் பதவிக்காக முர்து பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

புதிய பிரதம நீதியரசர் இன்று பதவி பிரமாணம்

1985ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட முர்து பெர்னாண்டோ 1997ஆம் ஆண்டிலிருந்து பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பதவியை வகித்ததுடன் 2014 ஆம் ஆண்டில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

 இலங்கை வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது பெண் இவராகும். 

இதற்கு முன்னர் சிரியானி பண்டாரநாயக்க  இலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசர் பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.