கடும் மழையினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளையும் (26) நாளை மறு தினமும் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன்காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மற்றும் புதன்கிழமை (27) ஆகிய தினங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கான பதில் பாடசாலையை எதிர்வருகின்ற சனிக்கிழமைகளில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Related Posts

    மட்டக்களப்பில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும்…

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம்…