January 13, 2026

battifirst.com

Voice of Singingfish

கடும் மழையினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடும் மழை காரணமாக பொலன்னறுவையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் தற்போது 92,000 ஏக்கர் அடியை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன குமார தெரிவித்துள்ளார்.