August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

400 சொகுசு கார்கள் சட்டவிரோதமாக பதிவு – மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !

மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாத சுமார் 400 சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

400 சொகுசு கார்கள் சட்டவிரோதமாக பதிவு - மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !

இதன் காரணமாக அரசுக்கு 500 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.