August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

உயிரிழந்தவர் வலஸ்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய சாரதியாக கடமையாற்றி வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் எவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மறைந்திருக்கும் குற்றவாளி ஒருவரின் பெயரில் உள்ளூர் மக்களிடம் பணம் பறிப்பது தொடர்பாக உயிரிழந்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.