August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான்..!

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.