கொழும்பில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை அராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுயைடவர் ஆவார். 

கொழும்பில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

இவர் மேலும் சில நபர்களுடன் இணைந்து கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடத்தின் சுவர் ஒன்று இவர் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவையே இந்த மரணத்திற்குக் காரணம் என பணியாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரான 24 வயதுடைய கட்டட ஒப்பந்தக்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Related Posts

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21.01.2025) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

    அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !

    வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து…