August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன – விமல்வீரவன்ச

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என அவர் தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்ச

பிரிவினைவாத ஆதரவு தமிழ்தேசியகூட்டமைப்பு போன்றவற்றை தெரிவுசெய்வதற்கு பதில் தமிழ் மக்கள் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளனர் இதன் மூலம் பிரிவினைவாதம் இனவாதத்தை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கனடா தமிழ் அமைப்புகளின் விருப்பத்திற்கு  ஏற்ப செயற்படுவதற்கு பதில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் அபிலாசைகளை சமமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் ஆணை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளாhர்.