August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

மறுமலர்ச்சி யுகத்துக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை போன்று பொதுத்தேர்தல் வெற்றியையும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும் அரசியல் கலாச்சாரம் என்றும் நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றுள்ள நிலையில் ‘ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி பதிவேற்றம் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் பிரதான பங்காளர்களாகியுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்துள்ளார். தமிழர்களின் நம்பிக்கையை சிறந்த முறையில் பாதுகாப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.