August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

கங்குவாவுக்கு வில்லனாக மாறிய சத்தம். தயாரிப்பாளரின் அதிரடி முடிவு.

சூர்யா நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது ‘கங்குவா’. இந்நிலையில் இப்படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கங்குவா’ ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வெளியாகியுள்ள இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்திற்கு குவிந்துள்ள நெகட்டிவ் விமர்சனங்களால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

சூர்யா நடிப்பில் கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் கடந்து விட்டதால், சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த சில தினங்களாக இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் மும்முரமாக நடந்து வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார்.

அத்துடன் சூர்யாவும் கங்குவாவை பார்த்து அனைவரும் வாயை பிளப்பார்கள் எனவும் கூறினார். இதனால் இப்படம் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் பிரம்மாண்டமக ரிலீஸ் ஆகியுள்ள ‘கங்குவா’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது. குறிப்பாக படத்தின் சவுண்ட் இரைச்சல் தாங்க முடியவில்லை. தியேட்டரை விட்டு வரும் போது தலைவலியாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.