August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவே காட்டுயானைகளின் அட்டகாசங்கள், அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.