August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

1300 ஆண்டுகளாக அசையாமல் இருக்கும் பாறை.

சென்னையைச் சூழவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் மகாபலிபுரம் முக்கிய இடம் வகிக்கின்றது.

அங்கு அமைந்துள்ள பல கற்கோவில்களும் சிலைகளும் பல்லவ மன்னர் நரசிம்ம பல்லவர் கலையின் மீதும் படைப்புகளின் மீதும் கொண்டிருந்த ஈடுப்பாட்டை பறைசாற்றுவதாக திகழ்கின்றது.

கோவில்கள் மற்றுமன்றி இங்குள்ள பாறைகளுக்குமே வரலாற்று பின்னணி காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? 

ஆம் அப்படி ஒன்று தான் இந்த கிருஷ்ணரின் வெண்ணைப்பந்து என்றழைக்கப்படும் பாறை. இது புவி ஈர்ப்பு விசையின் விதிகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

இந்த வெண்ணைப்பாறை சுமார் 250 தொன் எடைக் கொண்டது. 20 அடி உயரமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாறையானது வழுக்கும் சரிவு ஒன்றில் கொஞ்சம் சாய்ந்த வண்ணம் அமைந்திருக்கிறது.

இதன் அமைப்பு, பார்ப்பதற்கு எந்நேரமும் உருண்டு விழுந்துவிடக் கூடும் என்கிற நிலையில் தான் இருக்கும். ஆனால் சுமார் 1,300 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. 

அப்படி என்ன சிறப்பு இந்த பாறையில் இருக்கின்றது? இந்த பாறையின் வரலாற்று பின்னணி தொடர்பில் முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.