January 15, 2026

battifirst.com

Voice of Singingfish

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இதற்கமைய, வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள், 12ஆம் திகதி அன்று தேர்தல் பணிக்காக அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும். அனைத்துப் பாடசாலைகளும் 13ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.