January 15, 2026

battifirst.com

Voice of Singingfish

திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் பிரச்சாரக் காலம் நிறைவடைகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்தேர்தல் தேர்தல் முடிவடையும் நேரம் வரை மௌன காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை நள்ளிரவுடன் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

இந்த காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  குறித்த நாட்களில் தபால்மூலம் வாக்காளிக்க தவறிய  வாக்காளர்கள் இன்றும் (07) நாளையும் (08) தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.