August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர் – அம்பலப்படுத்தும் அதிகாரி

கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல் அமைச்சராக செயற்பட்டவரின் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முடிந்ததாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் அமைச்சரின் அலுவலக செலவுகளில் தற்போது மாதத்திற்கு 30 லட்சம் ரூபா சேமிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்க

கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல் அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்களுக்கு எரிபொருள், உணவு போன்றவற்றிற்காக பெருந்தொகை பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதில் இருந்து இந்தத் தொகை சேமிக்கப்பட்டுள்ளதாக குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் காலத்தில் 20 பேர் அவரது தனிப்பட்ட பணியாளர்களாக பணியாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ரணில் அரசாங்கத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.