October 18, 2025

battifirst.com

Voice of Singingfish

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை  (30) நிராகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின்  சுயேச்சைக் குழு வேட்பாளரான கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு பிரீதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.