காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவதற்கும் தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் பற்றி விவாதிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய திட்டங்களை விவாதிக்க மத்தியஸ்தர்களின் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் மத்தியஸ்தர்களிடம் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 53 பேரும், லெபனானில் 21 பேரும் கொல்லப்பட்ட நிலையில் எகிப்து ஜனாதிபதியால் சமாதான பேச்சவார்த்தைக்கான இந்த அறைகூவல் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸும் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
More Stories
இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு
இலங்கை செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த தமிழருக்கு நேர்ந்த கதி
கனேடிய அரசாங்கத்தின் புதிய எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்