August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த இந்திய மகளிர்: தொடரையும் கைப்பற்றினர்

இந்திய மகளிர் அணிக்கும் நியூஸிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இன்றைய மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 49.5 ஓவர்களில் 232 ஓட்டங்களை பெற்றது. இதில் புருக் ஹாலிடே 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

முன்னதாக, அவருடைய அணி 5 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலேயே, ஹாலிடேயின் சிறப்பான ஆட்டம் அவருடைய அணிக்கு பெரிதும் உதவியது.

இந்தநிலையில், பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 44.2 ஓவர்களில் 236 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது. இதில் மந்தானா 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியில் நியூஸிலாந்து அணியுனான மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.