இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 – 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இதே வகையான இரண்டு தொடர்களில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது.
இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடவுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடரை முன்னிட்டு மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக விளையாடிய அலிக் அதானேஸ் நீக்கப்பட்டு அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த ஒரு மாற்றமே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்கான இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் இடம்பெறவில்லை.
இது இவ்வாறிருக்க, கரிபியன் தீவுகளுக்கு ஏற்கனவே பயணமாகியுள்ள இங்கிலாந்து அணியின் தலைவராக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உபாதை காரணமாக ஜொஸ் பட்லர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் லியாம் லிவிங்ஸ்டோனுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அணிகள்
மேற்கிந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப் (தலைவர்), ஜுவெல் அண்ட்றூ, கியசி கார்ட்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ப்றெண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் கேட்டி, ஷேர்ஃபேன் ரதஃபர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வோல்ஷ் துச.
இங்கிலாந்து: லியாம் லிவிங்ஸ்டோன் (தலைவர்), மைக்கல் பெப்பர், பில் சோல்ட், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண், வில் ஜெக்ஸ், டான் மூஸ்லி, ஜெமி ஓவர்ட்டன், ரெஹான் அஹ்மத், ஜொவ்ரா ஆச்சர், ஜவர் சோஹான், சக்கிப் மஹ்மூத், ஆதில் ராஷித், ரீஸ் டொப்லே, ஜொன் டேர்னர்.
More Stories
நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த இந்திய மகளிர்: தொடரையும் கைப்பற்றினர்